Friday 10 October 2014

எபோலா நோய்க்கு -4000 பலி,எபோலா,வைரஸ்,நோய்,மருந்து

எபோலா என்னும் கொடிய நோய்க்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளில் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. எய்ட்ஸைவிட கொடிய நோயாக கருதப்படும் எபோலோ பரவமால் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுத்து வருகிறது. ‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் எபோலா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் 7 நாடுகளை சேர்ந்த 8,399 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4,033 பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த முறை உலக சுகதார நிறுவன வெளியிட்ட அறிக்கையின் போது, 8033 பேர் நோயால் பாதிக்கப்பட்டதாக பதியப்பட்டுள்ளதாகவும் 3,865 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பிடத்தக்கது. எபோலோ நோய் பாதிக்கப்பட்டுள்ள 7 நாடுகள் இரு பிரிவுகளாக உலக சுகாதார நிறுவனம் பிரித்துள்ளது.  முதல் பிரிவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக கினியா, லைபிரியா, சீராலியோன் உள்ளிட்ட நாடுகளும் இரண்டாவது பிரிவில் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நாடுகளான நைஜீரியா, செனாகால், ஸ்பெய்ன், மற்றும் யு.எஸ் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment