Tuesday 7 October 2014

வேகமாக பரவுகிறது-எபோலா வைரஸ்-ஐ.நா உயர் அதிகாரி தகவல்

                      ஐ.நா. அமைப் பின் உலக உணவு திட்ட (டபிள்யூஎப்பி) மண்டல இயக்குநர் டெனிஸ் பிரவுன் கூறும்போது, "ஆட்கொல்லி வைரஸான எபோலாவை கட்டுப்படுத் துவதற்கு உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அப்படி இருந்தபோதிலும் அந்த முயற்சியைவிட வேகமாக எபோலா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, இதைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச சமுதாயம் கூட்டாக இணைந்து அதிவேகமாக செயல்பட வேண்டி யது அவசியமாகிறது" என்றார்.

ஐ.நா.வின் எபோலா அவசர மீட்பு திட்டத்தின் (யுஎன்எம் இஇஆர்) தலைவர் அந்தோனி பன்பரி, எபோலா வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்த திட்டத்தின் தலைமையகம் அமைந்துள்ள அக்ரா, கானா ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்ட பன்பரி, கடந்த 2 நாட்களாக லைபீரியாவில் எபோலா பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்தார்.

நிதி பற்றாக்குறை

எபோலா வைரஸை கட்டுப் படுத்தும் முயற்சிக்கு நிதி பற்றாக் குறையும் முக்கிய தடைக்கல்லாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ.6,026 கோடி தேவைப்படும் நிலையில், இதுவரை ரூ.1,561 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமான நலன்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (ஒசிஎச்ஏ) தெரிவித்துள்ளது.

எபோலா வைரஸால் பாதிக் கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, சுகாதார வசதிகள், மண்டல அளவில் மனிதாபிமான அடிப்படையிலான ஹெலிகாப்டர், விமான சேவைகள் ஆகியவற்றை டபிள்யூஎப்பி செய்து வருகிறது. இதற்காக ஐ.நா. மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து இதுவரை ரூ.81 கோடி வழங்கப் பட்டுள்ளது. ஆனாலும் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த அமைப்பு லைபீரியாவின் மொன்ரோவியாவில் 2 சிகிச்சை மையங்களை கட்டி வருகிறது. 400 படுக்கைகளுடன் கூடிய இந்த மையம் இந்த மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வரும்.

No comments:

Post a Comment